அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குன்னம் அருகே நிர்வாண நிலையில் பெண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நெடுவாசல் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு குன்னம் அருகே உள்ள மருவத்தூர் பகுதியில் தோட்டம் உள்ளது. இன்று காலை அந்த வழியாக பொதுமக்கள் வேலைக்கு சென்றனர். அப்போது தோட்டத்துக்கு தண்ணீர் செல்லும் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அருகே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் நிர்வாண நிலையில் தண்ணீரில் மிதந்தது. அதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் நில உரிமையாளர் ராமலிங்கத்துக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர் சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்தார்.

கார்த்திகேயன் மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததில் ஒரு பையில் துணிகள் இருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிர்வாண நிலையில் பெண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் குன்னம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-