அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய், செப். 04
துபை ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட துபையின் கனவுத்திட்டங்களில் ஒன்றான, மால் ஆப் தி வேல்டு எனும் உலகின் மிகப்பிரமாண்ட மால் கட்டும் திட்டம் எதிர்கால வசதிகளையும், திட்ட விரிவாக்கத்தையும் கருத்திற்கொண்டு தற்போது துபையின் புறநகர் பகுதியான 'ஷேக் முஹமது பின் ஜாயித் நெடுஞ்சாலை' அருகே எழுப்பிட திட்டமிடப்பட்டுள்ளது.

உலகின் குட்டி நாடான 'வாட்டிகன் சிட்டி'யை விட பெரிதான நிலப்பரப்பு என்ற 'தீயான' விளம்பரத்துடன், சுமார் 7 கி.மீ. சுற்றளவில், 100க்கு மேற்பட்ட நட்சத்திர தங்கும் விடுதிகள் மற்றும் அப்பார்ட்மெண்ட்கள், கடைவீதிகள் என சுமார் 2 மில்லியன் மக்கள் தங்குவதற்கான வசதிகளுடன் தயாராகவுள்ளது.

Source: 7 days
தமிழில்:
அதிரை நியூஸ்:


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-