அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கடந்த 22/9/16 அன்று இரவு கோவையில் இந்து  முன்னனி_அமைப்பை சேர்ந்த சசிகுமார் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் அதை தொடர்ந்து
23/9/16 மறுநாள்  சசிகுமார் அவர்களை அடக்கம் செய்ய சென்ற ஊர்வலத்தின் போது

ஏற்பட்ட பதற்றத்தில் ஒரு சிலரால் கல்வீச்சும்,வாகன எரிப்பும்,வழிபாட்டு தலங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
இந்த பதட்டமான சூழ்நிலையில் இன்று

24/9/16 கோவை சூலூர் பகுதியில் கடந்த வாரம் வாகன விபத்தில் மரணமடைந்து  பெயர்விலாசம் மற்றும் அடையாளம் தெரியாமல் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது,உறவினர் யாரும் உரிமை கோராத அந்த ஆதரவற்ற சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று (24//9/16) இஸ்லாமியர்களால் #கோவை_ஆத்துப்பாலம்_இந்துக்கள் மயானத்தில் வைத்து இறந்தவருக்கு #உறவாய் இருந்து நல்லடக்கம் செய்யும் நற்பணி நடைபெற்றது.
பல கோடி #மதவெறியர்கள் கோவையில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வந்தாலும் சாமனியர்களான நாங்கள் #இந்துக்கள்_இஸ்லாமியர்கள்

#சமத்துவத்துவத்துடனும்_சகோதரத்துவத்துடனும்_சமூகநல்லிணக்கத்துடனும்_மனிதநேயத்துடனும் தான் வாழ்ந்து வருகிறோம் என்பதற்கான மிகச்சிறிய உதாரணம் தான் இந்த நற்பணி .....்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-