அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூரில் நகர தி.மு.க. சார்பில் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, தி.மு.க. உதயமான தின விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் பெரம்பலூர் தேரடி திடலில் நேற்று இரவு நடந்தது. பொதுக்கூட்டத்திற்கு பெரம்பலூர் நகர கழக செயலாளர் முத்துரத்னா பிரபாகரன் தலைமை தாங்கினார். நகர துணைச்செயலாளர் ரெங்கராஜன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தலைமை கழக முதன்மை செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ., தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்ட கழக செயலாளர்கள் ராஜேந்திரன் (பெரம்பலூர்), சிவசங்கர் (அரியலூர்), பொதுக்குழு உறுப்பினர்கள் ஓவியர் முகுந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் துரைசாமி, ராஜ்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் 12–வது வார்டு செயலாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-