அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


Allo

தற்போது ஸ்மார்ட் போன் இல்லாதவர்களே இல்லை என்று கூறலாம். அப்படியான ஸ்மார்ட்போன்களுக்கென்று பல அரட்டை ஆப்கள் உள்ளபோதிலும் தற்போது கூகுள் நிறுவனம் ‘அல்லோ’ என்ற புதிய ஆப்பை களத்தில் இறக்கியுள்ளது.
‘அல்லோ’ வின் சிறப்பம்சங்கள்:
ஸ்மார்ட் போனில் தற்போது தகவல்களை பரிமாற பயன்படுத்தும் ஆப்களில் ஒன்று ‘வாட்ஸ் அப்’ அதை பின்னுக்கு தள்ளும் வகையில் கூகுள் நிறுவனம் ‘அல்லோ’ என்ற புதிய ஆப்பை அறிமுகபடுத்தியுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஸ் பயனாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம் ஏனெனில் இதில் ‘என்ட் டூ என்ட் என்க்கிரிப்ஷன்’ இருப்பதால் நம் அரட்டைகள் மிக ரகசியமாகவே பாதுகாக்கப்படும் என்கின்றது கூகுள் நிறுவனம்.
‘கூகுள் அசிஸ்டெண்ட்’ என்ற தொழிநுட்பம் இந்த ஆப்பில் இருப்பதால் அரட்டை மட்டுமின்றி கூகுளின் பிற சேவைகளை இந்த சாட் அப்ளிகேஷனில் இருந்தே எளிதாக பெறலாம். நம் அரட்டையில் உள்ள எழுத்துகளின் வடிவத்தை நாம் விரும்பும் வகையில் அமைக்கலாம் சில முக்கிய கருத்துகளை சிறப்புப்படுத்திக் காட்ட ஃபான்ட் சைஸ்களை மாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நம் புகைப்படங்களின் மீது வரையும் வசதியும் தரப்பட்டுள்ளது.
‘கூகுள் அசிஸ்டெண்ட்’ சேவைகளை அளிப்பது மட்டுமின்றி அதனுடன் நாம் கேட்கும் அனைத்து சந்தேகதிற்கும் குட்டி ரோபோ போன்று அல்லோ உதவி புரியுமாம். மெஸ்சேன்ஜரில் உள்ளது போன்று 24 வகையான ஸ்டிக்கர்ஸ் நாம் ஜாலியான அரட்டைக்கு பயன்படுமாம் அல்லோவை நாமும் பதிவிறக்கம் செய்யலாமே!......

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-