
புதுடில்லி : சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற திட்டத்தின் ரூ. 1999 க்கு இலவச சிம் கார்டுடன், 90 நாட்களுக்கு இலவச டேட்டா மற்றும் இலவச வாய்ஸ் கால்கள் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியது. மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் இந்த சேவையால், அதிகப்படியான வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் சேவைக்கு மாறி வருகின்றனர்.
இதனால் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காகவும், புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காகவும் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் போட்டி போட்டு சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றன. இதன்படி ஏர்டெல் நிறுவனம் ஜியோவை விட குறைவாக ரூ.1494 க்கு 90 நாட்களுக்கு இலவச டேட்டா சேவையை 4ஜி வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. 90 நாட்களுக்கு பிறகு குறைந்த கட்டணத்தில் இணையதள சேவை வழங்கப்பட உள்ளது.
தற்போது அதிகமானவர்கள் இந்த சேவையை பயன்படுத்த முன்வந்துள்ளதால் முதல்கட்டமாக டில்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் நாடு முழுவதிலும் உள்ள பிற பகுதிகளுக்கும் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜியோ அறிமுகத்திற்கு பிறகு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பலவும் டேட்டா கட்டணங்களை 67 சதவீதம் வரை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.