அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்குடிகாடு அருகே உள்ள வடக்கலூர் ஊராட்சியில் உள்ள குக்கிராமம் கத்தழைமேடு. இந்த ஊருக்கு ஒரே ஒரு மினி பஸ் மட்டும் தினசரி 3 முறை வரும். இந்த ஊரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பம் வகிக்கிறது. இங்கு 1957ல் தொடக்கப்பட்ட ஒரு அரசு தொடக்க பள்ளி இப்போது பெரம்பலூர் மாவட்டதிற்கு முன் மாதிரிப் பள்ளியாக செயல் படுகிறது. இந்த பள்ளியில் கணினி வசதி, ஏர் கூலர், சுகாதாரமான வகுப்பு அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, கழிப்பறை சென்று வெளியே வந்தால் கை கழுவ சோப்பு, டவல்( துண்டு), என உள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு தனியார் பள்ளிக்கு நிகரான பள்ளி சீருடை, மற்றும் அடையாள அட்டை, டை, என பல உள்ளது. இந்த பள்ளியை பற்றிய சிறு வீடியோ தொகுப்பு. .

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-