அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய்: துபாய் சுற்றுலாத்துறை துபாய் சுற்றுலா சின்னத்தின் வடிவில் தண்ணீரில் மிதக்கும் பூங்காவை அமீரகத்தில் இயங்கி வரும் சுற்றுலா தனியார் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளது. துபாய் நகரில் ஜுமைரா கடற்கரை அருகே அமைந்துள்ள இந்த பூங்கா நேற்று திறக்கப்பட்டது. இந்த மிதக்கும் தண்ணீர் பூங்காவானது 208 அடி நீள, 108 அடி அகல பரப்பளவில் கடல் நீரில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவிற்கு கடற்கரையில் இருந்து செல்ல சிறு படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த படகுகள் மூலம் மிதக்கும் தண்ணீர் பூங்காவினுள் பார்வையாளர்கள் செல்லலாம். இங்கு பல்வேறு நீர் சறுக்கு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இந்த மிதக்கும் தண்ணீர் பூங்காவில் ஒரே சமயத்தில் 500 பேர் கலந்து கொள்ளலாம். இந்த பூங்கா தண்ணீரில் மிதப்பதற்காக செயற்கை இழைகள் மூலம் உருவாக்கப்பட்ட கடினமான பிளாஸ்டிக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-