அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய், செப்.18
ராஸ் அல் கைமா எமிரேட் போக்குவரத்து துறைக்குச் (RAKTA) சொந்தமான 45 இருக்கைகள் கொண்ட சில பஸ்களிலும் மற்றும் லிமோசின் டாக்ஸிக்களிலும் முதற்கட்டமாக 'படித்துக் கொண்டே பயணியுங்கள்' (Reading trip) என்ற திட்டத்தின் கீழ் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

படிப்படியாக அனைத்து பஸ்கள் மற்றும் (limousine) சொகுசு டாக்ஸிக்களிலும் ஏற்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தினால் நீண்ட தூரம் பயணம் செய்யும் இன்டர்சிட்டி பஸ் பயணிகள் பயனடைவதுடன், பயணிகளின் வாசிக்கும் பழக்கமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஸ் அல் கைமா போக்குவரத்துக் கழகம் (RAKTA) மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறையின் (Economic Development Dept) கூட்டு நடவடிக்கையின் மூலம் துவங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்படி ஆரம்பமாக 180 ஆங்கில மற்றும் அரபு புத்தகங்கள் இந்த பேருந்து நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என்றாலும் விரைவில் உருது உட்பட பல மொழி புத்தகங்களும் பேருந்து பயணிகளை கவரவுள்ளன, இறங்கும் போது மறக்காமல் புத்தகத்ததை திருப்பி வைத்து விடுங்கள் என்ற முன்னறிவிப்புடன்.

Source: Khaleej Times
தமிழில்: 
அதிரை நியூஸ்(நம்ம ஊரான்)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-