அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
அரபு நாட்டில் அரபு மொழியை தாய்மொழியாக கொண்ட நபியின் வழியாக அரபு மொழியில் திருகுர்ஆன் அருள பட்டது தான் நமக்கும் பெருமை சேர்க்கும் விசயமாகும் என சவுதி மன்னர் சல்மான் தமது தேசிய தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


செப்டம்பர் 23 சவுதி அரேபியாவின் தேசிய தினமாகும்


இது பற்றி சவுதி மன்னர் சல்மான் கூறும் போது,


எனது தந்தை அப்துல் அசீஸ் அவர்கள் இந்த நாட்டை அன்னிய ஆதிக்கத்தில் இருந்து மீட்டு புனர் நிர்மானம் செய்தார்.


அதனை தொடர்ந்து அவரது வாரிசுகள் காலித் பைஸல் பஹத் அப்துல்லாஹ் போன்றவர்கள் தொடர்ந்து இந்த நாட்டிர்கு சேவை ஆற்றினர் .


நமது நாட்டிற்கு பல பெருமைகள் இருந்தாலும் அரபு நாட்டில் அரபு மொழியை தாய்மொழியாக கொண்ட நபியின் வழியாக அரபு மொழியில் திருகுர்ஆன் அருள பட்டது தான் நமக்கு மிக பெரும் பெருமை சேர்க்கும் விசயமாகும்.


குர்ஆன் இறங்கிய மண்ணில் நபி வாழ்ந்த மண்ணில் வாழும் நமக்கு மிக பெரிய சமூக பொறுப்புகள் உள்ளது என்பதை உணர்ந்து அதற்கு ஏர்ப்ப நமது வாரிசுகளை வார்த்து எடுக்க வேண்டும்.


நமது மண்ணில் மக்கா இருக்கிறது மதீனா இருக்கிறது. நமது நாட்டிர்கு ஹஜ் உம்றா செய்யும் நோக்கில் உலக முஸ்லிம்கள் குவிகிறார்கள். அவர்களை மதிப்பதற்கு அவர்களுக்கு சேவை செய்வதற்கும் நம்மை நாம் பண்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-