அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஷார்ஜா, செப். 05
மின்சாரம் மற்றும் தண்ணீரை சேமிக்கும் நோக்குடனும், வீண்விரயம் செய்யாமலிருக்கவும் அதன் வழி பொதுமக்கள் தங்களின் பொருளாதாரத்தை மிச்சப்படுத்தவும் ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர்கள் பரீட்ச்சார்த்தமாக ஷார்ஜாவின் முவைலே, ஹம்ரியா ப்ரீ ஜோன் மற்றும் ஏர்போர்ட் ப்ரீ ஜோன் ஆகிய பகுதிகளில் 1500 பயனாளிக்கு பொருத்தப்பட்டு சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது 5000 இணைப்புக்கள் பெரிய தொழிற்சாலைகளுக்கும், வணிகத் திட்டங்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

படிப்படியாக ஸ்மார்ட் மீட்டர்கள் ஷார்ஜா முழுவதும் பொருத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள மீட்டர்கள் திரும்பப் பெறப்படும். உதாரணத்திற்கு, இந்த ப்ரீபெய்டு மீட்டர் திட்டத்தின் மூலம் பயனாளி ஒருவர் 500 திர்ஹம் செலுத்துவாரேயானல் பயன்படுத்த, பயன்படுத்த குறைந்து கொண்டே வரும் முன்பணத்தின் அளவை தினசரி ஸ்மார்ட் மீட்டரில் கண்காணிக்கலாம் மேலும் தான் முன் செலுத்திய தொகை முடிந்து விட்டாலும் மீண்டும் எந்த நேரத்திலும் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். அதாவது தற்போது மொபைல் போன்களுக்கு முன் பணம்; செலுத்தி பாவிக்கும், பேலன்ஸ் தெரிந்து கொள்ளும் அதே நடைமுறையே இதுவும்.

இந்த திட்டத்தின் மூலம் மாதாமாதம் கட்டணம் செலுத்த மறப்பது, இணைப்புக்கள் துண்டிக்கப்படுவது, மீட்டர்கள் சில வேளை பழுதடைவதால் ஏற்படும் பல்வேறு சிரமங்கள் குறைவு, தவறான கட்டணங்கள் வசூலிப்பு போன்ற புகார்கள் தவிர்ப்பு என பல்வேறு சாதக அம்சங்கள் இருப்பதாக ஷார்ஜா மின்சாரம் மற்றும் தண்ணீர் வாரியம் (SEWA) விளக்கமளித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-