அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய்: துபாய் சர்வதேச விமான நிலையம், பயணிகள் போக்குவரத்தில் பெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 76 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் துபாய் வந்து சென்றுள்ளனர். இது முந்தைய அதிகரிப்பு அளவை விட 14 சதவீதம் உயர்வு என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சர்வதேச அளவில் துபாய் விமான நிலையம் எப்போதும் பயணிகள் போக்குவரத்தில் முன்னணி வகித்து வருகிறது. ஜூலையில் ரம்ஜான் நோன்பு நாட்களாக இருந்துள்ள நிலையில், பயணிகள் போக்குவரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்துள்ளது.

ேமலும் வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள் என்று பல தரப்பட்டவர்களும் துபாய் வழியாக செல்வதை விரும்புகின்றனர். இந்தாண்டு முதல் ஏழு மாதங்களில் பயணிகள் போக்குவரத்து ஏழு சதவீதம் உயர்ந்துள்ளது. சரக்கு போக்குவரத்தை பொறுத்தவரை, துபாய் விமான நிலையத்தில் 1.2 சதவீதம் ஜூலை மாதம் குறைந்துள்ளது. எனினும், முதல் ஏழு மாதங்களில் 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது.- See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=243669#sthash.MyIorrXy.dpuf

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-