அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஒரு கல்லில் இரு மாங்காய் என நாம் சொல்லிக் கொண்டிருப்போம் ஆனால் துபை மின்சார வாரியமும் பள்ளிக்கூடங்களும் இணைந்து அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆம், முதலில் 50 பள்ளிக்கூட மேல்மாடி கூரைகளில் சூரிய ஒளி மின்தகடுகளை பொருத்தி பள்ளிக்கூடத்திற்கு தேவையான மின்சாரத்தை சுயமாக தயாரித்துக் கொள்வதுடன் மிச்சமாகும் மேலதிக மின்சாரத்தை துபை மின்சார வாரியத்தின் மின்சக்தி சேமிப்பு நிலையத்திற்கு (Power Grid) வழங்கும் இந்தத் முழு திட்டத்தின் பெயர் 'ஷம்ஸ் துபை'.

விரைவில் 100 பள்ளிக்கூடங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ் துபை மின்சார வாரியம் அமைத்துத் தரும் சோலார் பேனல்களின் செலவை மட்டும் 7 வருடங்களில் படிப்படியாக திருப்பி செலுத்தினால் போதும் அதன் பின் அந்தப் பள்ளிகள் மின்சாரத்திற்காக மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டிய நிலையிலிருந்து விலகி சோலார் மின்சாராத்தை இலவசமாகவே அனுபவிக்கலாம்.

2050 ஆம் ஆண்டுக்கள் துபையின் 75 சதவிகித மின்சாரம் சூரிய ஒளியிலிருந்தே தயாரிக்கப்படவுள்ளன இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைவதிலிருந்து பாதுகாக்கப்பட்டு பசுமை துபையாக மிளிரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கும் மின்சார தயாரிப்பு மற்றும் எதிர்கால மின் திட்டங்கள் குறித்த கல்வி அறிவும் கிடைக்கும். இதன் தொடர்பில் 'துபை எதிர்கால சூரிய மின்சக்தி நகரம்' என்ற தலைப்பில் அவர்களின் ஆர்வத்தை தூண்டிவிடும் அறிவியல் போட்டி எதிர்வரும் அக்டோபர் 4 முதல் 6 வரை நடைபெறவுள்ளது.

ஏற்கனவே, 'ஷம்ஸ் துபை' திட்டத்தின் கீழ் 18 அரசு நிறுவனங்களுடன் இணைந்து 37 சோலர் மின் திட்டங்கள் கடந்த மே மாதம் அமைக்கப்பட்டு 'உண்மையான மின்மிகை தயாரிப்பால் எஞ்சும் மின்சாரம்' துபை மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்டு வருகிறதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளிலேயே மிகப்பிரமாண்ட திட்டமாக 23 ஆயிரம் சதுர மீட்டரில், நீர் தேக்கங்களுக்கு மேல் சுமார் 5,240 சூரிய ஒளி மின்தகடுகள் பொருத்தப்பட்டு 1.5 மெகாவாட் நேரடி மின்சாரம் தயாரிக்கப்பட்டு ஜெபல் அலி மின் உற்பத்தி நிலையத்துக்கு வழங்கப்பட்டு வருவதையும் பார்த்து நாம் பொறாமைபடுவதை தவிர வேறு வழியில்லை. இந்தத் திட்டத்தால் ஆண்டொன்றுக்கு 1,600 டன் கரியமில வாயு காற்றில் கலக்கப்படுதிலிருந்தும் தடுக்கப்படுகிறதாம்.

கையில் நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணெய்க்கு அலையும் நமக்கும் மக்கள் நலன் விரும்பும் நல்லாட்சியாளர்கள் எப்போது கிடைப்பார்கள் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே இத்தமிழாக்கப் பதிவு.

Source: Gulf News
தமிழில்:அதிரை நியூஸ்:
துபாய், செப். 07

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-