அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வாணியம்பாடியில் இன்று காலை பள்ளிக்கு சென்ற சிறுவன் 
முஹம்மது ஈசான் டிராக்டரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முஹம்மது ஈசான்வாணியம்பாடி:

வாணியம்பாடி நூருல்லா பேட்டையை சேர்ந்தவர் மன்சூர் அகமது. இவருடைய மகன் 
முஹம்மது ஈசான் வயது 9) காதர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். வாணியம்பாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் இயங்கும்.

பள்ளியில் தேர்வுகள் நடந்து வருகிறது. இன்று காலை முகமது ஈசானை அவரது தாத்தா நசீர் அகமது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார்.

காதர்பேட்டை ஜங்‌ஷன் பகுதியில் வந்தபோது டிராக்டர் ஒன்று வந்தது. அப்போது நசீர் அகமது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். பின்னால் இருந்த 
முஹம்மது ஈசான் கீழே விழுந்து டிராக்டர் சக்கரத்தில் சிக்கினான். அவர் மீது டயர் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய சிறுவன் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தான்.

வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-