அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஆக்ரா: உ.பி,யில் மேற்கு பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், 35 முஸ்லிம் குழந்தைகளுக்கு குர்ஆன் ஓதி கொடுக்கிறார்.

.

உ.பி.,யின் ஆக்ராவின் சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த பூஜா குஷ்வாகா என்ற மாணவி, கோவில் வளாகத்தில், முஸ்லிம் குழந்தைகளுக்கு இலவசமாக குர்ஆன் ஓதி கொடுக்கிறார்.

.

இது தொடர்பாக பூஜாவிடம் குர்ஆன் ஓதும் 5 வயது சிறுமியின் தாயார் ஒருவர் கூறுகையில், இந்த வயதில், மாணவியின் திறமையை பார்த்து ஆச்சர்யமாக உள்ளது. எனது குழந்தைக்கு இந்த மாணவி ஆசிரியையாக இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. அந்த சிறுமியின் மதம் குறித்த எண்ணம் எனக்கோ மற்ற சிறுமிகளின் பெற்றோர்களுக்கோ வரவில்லை" எனக்கூறினார்.

.

பூஜா குஷ்வாகா கூறுகையில், "பல வருடங்களுக்கு முன், முஸ்லிம் தந்தைக்கும், இந்து மதத்தை சேர்ந்த தாயாருக்கும் பிறந்த சங்கீதா பேகம் என்ற பெண், குழந்தைகளுக்கு குர்ஆன் ஓதி கொடுத்து வந்தார். இதில் ஆர்வமடைந்த நான் அந்த வகுப்பில் கலந்து கொண்டேன். அதில் குர்ஆனை மற்றவர்களை விட நன்கு கற்றுக்கொண்டேன்" எனக்கூறினார்.

.

சில குறிப்பிட்ட காரணங்களால் சங்கீதா பேகத்தால் குர்ஆன் வகுப்பை தொடர முடியவில்லை. இதனையடுத்து அவரது ஆலோசனையின் பேரில் பூஜா குஷ்வாகா, குரான் வகுப்புகளை தொடங்கினார்.

.

பூஜா தொடர்ந்து கூறுகையில், என்னிடம் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் கொடுக்க பணம் இல்லை. நானும் பணம் வாங்க விரும்பவில்லை. குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வீட்டில் போதிய இடம் இல்லாத காரணத்தினால் பெரியவர்களின் ஆலோசனைப்படி கோவில் வளாகத்தில் கற்பித்து வருகிறேன் என்றார்.

.

பூஜாவின் மூத்த சகோதரியும் அப்பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு இந்தி மற்றும் பகவத் கீதை கற்பித்து வருகிறார்.

.

70 வயதாகும், இஸ்லாம் மத தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்த நகரில் சமூக நல்லிணக்கத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு ஆசிரியர் என்பவர் ஆசிரியரே. அதில் அவரது மதம் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது. யாராவது அரபிக் மொழி கற்பதையோ, குரான் வாசிப்பதையோ இஸ்லாம் மதம் எதிர்க்கவில்லை" என்றார்.

.

நன்றி: தின மலர்

.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-