அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கடலூர்: கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நள்ளிரவு 1.05 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று பெரம்பலுார் மாவட்டத்தில் வி.களத்தூர்,லப்பைகுடிகாடு குன்னம், சின்னாறு, மங்கள மேடு பேரளி,அகரம் சீகூர் உள்பட    பல இடங்களில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடி விவரம் இதுவரை வெளியாகவில்லை. கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் பெரிதும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.     ல்

வி்களத்தூர் .லெப்பைகுடிகாடு உள்ளிட்ட நமதூர் பகுதியிலும்  
3முதல்5 செகன்ட் வரை புல்டோசர் போகும்போது எழும் சத்தம்போன்ற சத்ததுடன்  நில அதிர்வு உணரப்பட்டது பல பகுதிகளில் மக்கள் பதட்டதுடன் வீட்டை விட்டு வெளியில் வந்தார்கள் பலரின் உடல்மாற்றங்கள் நிகழ்ந்த தாக கூறினார்கள் .

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்படும் இரண்டாவது நில நடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் 5 வருடம் முன் ரமழான் மாதம் இரவில் ஏற்பட்டது.
*எங்கள் இறைவா எங்கள் பாவங்களை  மண்ணித்து உன் கோபத்தின் பிடியில் இருந்து எங்களை பாதுகாப்பாயாக 

ஆமீன் ....*
நிலநடுக்கம் ஏற்படவில்லை: நிலநடுக்கத்துறை இயக்குநர் விளக்கம்
விழுப்புரம், பெரம்பலுார், கடலுார் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படவில்லை என நிலநடுக்கத்துறை இயக்குநர் விளக்கமளித்துள்ளார். சென்னை ஆய்வு மையத்தில் லேசான நில அதிர்வு கூட பதிவாகவில்லை. கொடைக்கானல், சேலத்தில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையத்திலும் மற்றும் டில்லி ஆய்வு மையத்திலும் நிலநடுக்கம் நில அதிர்வு உறுதி செய்யப்படவில்லை என நிலநடுக்கத்துறை இயக்குநர் மீனாட்சிநாதன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-