அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக்கின் தன்னார்வ அமைப்பு கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக அமைக்கப்பட்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் சார்பில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் (எஃப்சிஆர்ஏ) பதிவு செய்யப்பட்ட அமைப்பு ராஜீவ் காந்தி நிதி அறக்கட்டளை. அந்த அமைப்புக்கு, மற்றொரு தன்னார்வ அமைப்பான இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை (ஐஆர்எஃப்) கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.உள்துறை அமைச்சகத்தின் பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐஆர்எஃப் அமைப்பு, மதபோதகர் ஜாகிர் நாயக்குக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐஆர்எஃப் செய்தித் தொடர்பாளர் ஆரிஃப் மாலிக் கூறியதாவது: நாங்கள் எத்தனையோ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியுள்ள நிலையில், ராஜீவ் காந்தி அறக்கட்டளையை மட்டும் குறிப்பிட்டு சிலர் சர்ச்சையை எழுப்புவது ஏன்? என்றார் மாலிக்.

என்ன குற்றம் செய்தேன்?: “பயங்கரவாதத்தைப் பரப்புபவர் என்று முத்திரை குத்தும் அளவுக்கு என்ன குற்றம் செய்தேன்?’ என்று ஜாகிர் நாயக் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து வெளிநாட்டிலிருந்து அவர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 25 ஆண்டுகளாக நான் மதபோதனை செய்து வருகிறேன். ஆனால் இப்போதுதான் என் மீது “பயங்கரவாதத்தைப் பரப்புபவர், டாக்டர் பயங்கரவாதம்’ என்றெல்லாம் முத்திரை குத்தப்படுகிறது. மிகத் தீவிரமாக விசாரணை செய்தும், என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், மீண்டும் விசாரணை நடத்த வலியுறுத்தப்படுவது ஏன்? என்று அந்தக் கடிதத்தில் ஜாகிர் நாயக் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-