அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர் துரைப்பாடு.


பெரம்பலூர், செப். 16
குண்டும் குழியுமான சாலையில் தேங்கிக் கிடக்கும் கழிவு நீர் என அலங்கோலமாகக் கிடக்கும் வி.களத்தூர் கடை வீதி சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வி.களத்தூரின் மையத்திலுள்ளது கடைவீதி. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சாலை மற்றும் பசும்பலூர், கை.களத்தூருக்கும், மரவநத்தம் வழியாக வேப்பந்தட்டைக்கும் செல்லுகிற சாலைகளை இணைக்கிற மையப்பகுதியில் தான் இந்தக் கடைவீதி அமைந்துள்ளது. இடை விடாத பேருந்து இயக்கம், சீசன் வந்து விட்டால் களை கட்டும் கரும்பு லாரிகளின் ஆக்கிரமிப்பு என இச்சாலை பெரிதும் பாதிக்கப்பட்டு வரு கிறது. வி.களத்தூர்-வண்ணாரம் பூண்டி கிராமங்களை இணைத்திடும் கல்லாற்றுப் பால வேலைகளே ஆண்டுக் க ணக்கில் இழுத்தடிக்கப்பட்டன. இந்நிலையில், பஞ்சராகிக் கிடக்கும் கடை வீதி சாலை யின் அலங் கோ லம், நெடுஞ் சா லைத் துறை அதி கா ரி க ளின் கவ னத் திற்கே வரு வ தில்லை.
தொடர்ச்சியாக கனரக வாகனங்கள் சென்று வ ருவதால், ஏற்கெனவே மேடும் பள்ளமுமாக இருக்கும் சாலையின் பள்ளங் கள் மேலும் மேலும் ஆபத்தை விளை விக் கும் வ கை யில் சீர ழிந் து வ ரு கின் றன. இந் தப் பள் ளங் க ளில் சாலை யோர கழி வு நீ ரும் தேங் கு வ துண்டு. பள்ளங்களில் விழுந்து எழும் வாகனங்களின் டயர்கள் வீசியடிக்கும் கழிவு நீர், அருகில் இருக்கும் கடைகள் வரை தெறித்து விழுகிறது. இவ்வளவு கொடுமைகள் தொடர்ந்தாலும், இன்னமும் இந்த சாலைக்கு தீர்வு காணப்படாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறை உடனடியாக தரமான தார் சாலையை அமைத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-