அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
:
துபாய், செப். 05
துபை சாலை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு (RTA) சொந்தமான அனைத்து பேருந்துகளிலும் விபத்துக்களை கணிசமாக குறைக்கும் நோக்குடன் டிரைவர்களின் உடல்நிலைகளை கண்காணிக்கும் கருவி பொருத்தப்படுகிறது.

சோதனை முயற்சியாக சுமார் 50 பேருந்துகளில் பொருத்தப்பட்டதன் விளைவாக உடல்நலக்குறைவு, சோர்வு, மயக்கம், தூக்கமின்மை போன்ற குறைபாடுகளின் காரணமாக டிரைவர்களால் ஏற்படும் விபத்துக்கள் 88 சதவிகிதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

பேருந்து டிரைவர்களுக்கு முன்பாக பொருத்தப்படும் இக்கருவிகள் டிரைவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும். டிரைவர்களின் உடல்நிலையை பொருத்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும், கட்டளைகளும் பறக்கும். இந்தத் திட்டத்திற்கு 'அல் ரகீப்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், பஸ் டிரைவர்களின் நடத்தை அணுகுமுறை, வேகக்கட்டுப்பாடு மீறல், பாதுகாப்பு கொள்கைகளை உதாசீனப்படுத்துதல், பொறுப்பற்ற முறையில் பிரேக்குகளை கையாளுதல், திடீர் திடீர் எனத் திருப்புதல், மொபைல் போன்களை உபயோகித்தல் போன்றவற்றையும் கண்காணித்து அறிவிக்கும் மற்றொரு கண்காணிப்பு கருவியும் விரைவில் அனைத்து 1500 பேருந்துகளிலும் பொருத்தப்பட்டு சுமார் 3000 டிரைவர்கள் கண்காணிக்கப்படுவர்.

இந்த 2 திட்டங்களின் மூலம் பயணிகள் விபத்தில்லா அதிகபட்ச பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள முடியும். மேற்படி கண்காணிப்புக்குப் பின்னும் விதிகளை மீறினால் துபையில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல தனி வாக்கியம் தேவையில்லை.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-