அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

இனத்தால் நிறத்தால் மொழியால் குலத்தால் உருவாகும் அனைத்து வேற்றுமைகளையும் வேரறுக்கும் மார்க்கம் இஸ்லாம்


சிலர்கள் சமத்துவத்தை பற்றி மேடைகளில் முழங்குவார்கள் ஏடுகளில் எழுதுவார்கள் ஆனால் நடைமுறையில் இருந்து சமத்துவத்தை வெகுதொலைவில் விலக்கி வைப்பார்


மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே அவர்களிடையே இனத்தாலோ குலத்தாலோ மொழியாலோ வேற்றுமைகளை கற்பித்து அதன்அடிப்படையில் உயர்வு தாள்வுகளை கற்பிப்து மடமையின் அடையாளம் என பிரகடனம் செய்யும் இஸ்லாம் அதை தெளிவாக நடை முறைபடுத்தியும் காட்டுகிறது


இந்தியாவில் இன்று கூட தலித் மக்கள் மற்ற இந்துக்களோடு சமத்துவமாக நடத்த படுவதில்லை


தனிகுவளை முறையும் தனி சுடுகாடு முறையும் தனிகோவில் முறையும் இன்றளவும் இந்தியாவில் நிலைத்திருப்பதே இதற்கு போதிய சான்றாகும்


இதோ நாம் வெளியிட்டுள்ள படம் இஸ்லாம் மனிதர்களிடையே வேற்றுமைகளை வேரறுத்து சமத்துவத்தை நிலைநிறுத்தியுள்ளது என்பதற்கு சான்றுபகரும் படங்களில் ஒன்றாகும்


ஆம் ஆப்ரிக்காவின் கானா நாட்டை சார்ந்த பலர்கள் இஸ்லாத்தில் இணைநதனர் அவர்களில் பலர் இந்த ஆண்டு ஹஜ் செய்ய வந்தனர்


அவர்களை மக்கா என்னும் முஸ்லிம்களின் முதல் நிலை புனித தலத்தின் இமாம் வரவேற்று கட்டி அணைத்து கைகொடுத்து உபசரிக்கும் உன்னத காட்சியை தான் படம் விளக்குகிறது


மக்கா இமாமின் சந்திப்பிற்கு பிறகு அவர்கள் கூறியது


நாங்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் உள்ள கால கட்டத்தில் எங்கள் இனத்தவர்களை தவிர மற்றவர்கள் எங்களை தீட்டாகவே கருதினர்


எங்களோடு உரையாடுவதையே எங்களோடு கை குலுக்குவதையோ அவர்களுக்கு இணையாக எங்களை அமர வைப்பதையோ மற்றவர்கள் ஒரு போதும் ஏற்று கொண்டதில்லை


ஆனால் இஸ்லாம் அனைத்து வேற்றுமைகளையும் அழித்து ஒழித்தது


இஸ்லாத்திற்கு பிறகு எங்களுக்கான சுயமரியாதை கிடைத்திருக்கிறது


வஞ்கிக்க பட்ட ஒடுக்கபட்ட மக்களின் புகலிடமாக இஸ்லாம் மட்டுமே இருக்க முடியும்


எனவே ஒடுக்க பட்டவர்களும் இனஇழிவை சந்தித்து கொண்டிருப்பவுர்களும் இஸ்லாத்தை நோக்கி அணிவகுப்பதே சரியான முடிவாகும் எனவும் கூறினார்

-TMM-

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-