அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சின்னாறு அருகே சாலையில் சிதைந்து கிடந்த பெண்ணின் உடலை போலீசார் மூட்டையாக கட்டி அள்ளிச் சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர்   அருகே உள்ளது மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட எரையூர் சின்னாறு கிராமம். இந்த பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்த பகுதியில் மதுவிலக்கு அமலாக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் ஆயுதப்படை டி.எஸ்.பி. விக்னேஷ்வரன் ஆகியோர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் சின்னாறு கிராமம் அருகே சென்றபோது சாலையில் ஏதோ ஒன்று அடிபட்டு இறந்து கிடந்தது. உடனே அவர்கள் அருகே சென்று பார்த்து உள்ளனர். அப்போது இறந்து கிடந்தது பெண்ணின் உடல் என்பது தெரியவந்தது.
சுமார் 48 வயது மதிக்கத்தக்க அந்த பெண் இறந்தது குறித்து அவர்கள் மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் சாலையில் உடல் நசுங்கி, சிதைந்த நிலையில் கிடந்த பெண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? விபத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது யாராவது கொன்று சாலையில் வீசி சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும், அந்த வழியாக சென்ற வாகனங்கள் தொடர்ச்சியாக அந்த பெண்ணின் மீது ஏறி இறங்கியுள்ளது எனவும் போலீசார் தெரிவித்தனர். அடையாளம் தெரியாத அளவிற்கு முகம், உடல் அனைத்தும் சிதைந்து சாலையோடு சாலையாக ஒட்டி கிடந்துள்ளது. இந்த உடலை மூட்டையில் கட்டிதான் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனவே அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-