அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், செப். 17:
பெரம்பலூரில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் விநியோகத்தை பெரம்பலூரில் அமைச்சர் வளர் மதி தொடங்கி வைத்தார். அப்போது உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பட்டியல் அவுட் ஆனது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பாகப் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி பெரம்பலூர் மேற்கு வானொலித் திடல் அருகே நேற்று தொடங்கியது. அதிமுக அமைப்புச் செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான வளர்மதி, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ ராமச் சந்திரன், பெரம்பலூர் எம்பி மருத ராஜா, எம்எல்ஏ தமிழ்ச் செல்வன், நகரச் செயலாளர் ராஜ பூபதி, ஆகியோர் விருப்ப மனுக்களைப் பெறும் நிகழ்ச்சியை கூட்டாகத் தொடங்கி வைத்தனர்.
நகராட்சி கவுன்சிலர் பதவிக்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.5,000, பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.2,000, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு ரூ.11,000, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ரூ.5,000 வசூலிக்கப்பட்டது. அப்போது அமைச்சர் மற்றும் எம்பி முன்னிலையில், உள்ளாட்சி. தேர்தல் இட  ஒதுக்கீடு பட்டியல் அவுட் ஆனது.
பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் எந்தெந்த பதவியிடங்கள் எந்தெந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்கள், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை.

இட ஒதுக் கீடு விவ ரம்
அதிமுக நிர்வாகிகள் வசம் இருக்கும் இந்தப் பட்டியலின் படி, பெரம்பலூர் மாவட்டத்திற்கான இட ஒதுக்கீடு விபரங்கள் பின் வருமாறு:
பெரம் ப லூர் மாவட்ட அள வில் ஊரக அமைப் பு க ளில் 1,237 பத வி யி டங் கள், நகர மைப் பு க ளில் 81 பத வி யி டங் கள் என மொத் தம் 1,318 பத வி யி டங் க ளுக்கு தேர் தல் நடை பெற உள் ளது. இந்த உள் ளாட் சித் தேர் தல் மு தல், பெண் க ளுக்கு 50 சத வீத இட ஒதுக் கீடு செய் யப் பட் டுள் ளது. தாழ்த் தப் பட்ட பிரி வி ன ருக்கு 35 சத வீ தம் அதா வது 3ல் ஒரு பங்கு பதவி ஒதுக் கீடு செய் யப் பட் டுள் ளது. இதன் படி, பெரம் ப லூர் மாவட்ட ஊராட் சித் தலை வர் பதவி பொதுப் பிரி வி ன ருக்கு ஒதுக் கப் பட் டுள் ளது. பெரம் ப லூர் நக ராட் சித் த லை வர் பதவி எஸ்சி பிரி வைச் சேர்ந்த பெண் ணுக் கும், ஒன் றி யக் குழு தலை வர் பத வி க ளில் பெரம் ப லூர் ஒன் றி யம் பொது(பெண்), வேப் பூர் ஒன் றி யம் - பொது(பெண்), வேப் பந் தட்டை ஒன் றி யம் -எஸ்சி (பொது), ஆலத் தூர் ஒன் றி யம் - பொது வி லும், அரி ய லூர் மாவட் டம், செந் துறை-ஒன் றி யம் பொது வி லும் ஒதுக் கீடு செய் யப் பட் டுள் ளது.
இதே போல் பெரம் ப லூர் ஊராட்சி ஒன் றி யத் தில் உள்ள 20 ஊராட் சி க ளில் எளம் ப லூர், நொச் சி யம், வேலூர், கல் பாடி, கவுல் பா ளை யம், வடக் கு மா தவி ஆகிய ஊராட்சி மன் றத் த லை வர் பத வி யி டங் கள் எஸ்சி பெண் க ளுக்கு ஒதுக் கப் பட் டுள் ளது. இதேப் போல், ஆலம் பாடி, சத் தி ர மனை, எசனை, கோனே ரி பா ளை யம், லாட பு ரம், புது ந டு வ லூர், செங் கு ணம் ஆகிய ஊராட்சி மன் றத் த லை வர் பத வி யி டங் கள் பொது பெண் க ளுக்கு ஒதுக் கப் பட் டுள் ளது. அம் மாப் பா ளை யம், அய் ய லூர், பொம் ம னப் பாடி, கள ரம் பட்டி, கீழக் கரை, மேலப் பு லி யூர், சிறு வாச் சூர் ஆகிய ஊராட்சி மன் றத் தலை வர் பத வி யி டங் கள் பொதுப் பி ரி வி ன ருக் கும் ஒதுக் கப் பட் டுள் ளது.
பெரம் ப லூர் ஊராட்சி ஒன் றி யத் தில் உள்ள ஒன் றிய கவுன் சி ல ருக் கான 14 பத வி யி டங் க ளில் 7 இடங் கள் பெண் க ளுக் கும், 5 இடங் கள் எஸ் சிக் கும் ஒதுக் கீடு செய் யப் பட் டுள் ளது. இதன் படி, எசனை, ஆலம் பாடி, செங் கு னம், லாட பு ரம், மேலப் பு லி யூர் ஆகிய கவுன் சி லர் பத வி யி டங் கள் - எஸ்சி பெண் க ளுக் கும், அய் ய லூர், சத் தி ர மனை, சிறு வாச் சூர், நொச் சி யம் ஆகிய கவுன் சி லர் பத வி யி டங் கள் - பொது பெண் க ளுக் கும், அம் மா பா ளை யம், கல் பாடி, கீழக் கரை, வேலூர், எளம் ப லூர் ஆகிய கவுன் சி லர் பத வி யி டங் கள் பொதுப் பி ரி வி ன ருக் கும் ஒதுக் கப் பட் டுள் ளது.
பெரம் ப லூர் மாவட்ட உள் ளாட்சி அமைப் பு க ளில் எந் தெந்த பத வி யி டங் கள் எந் தெந்த பிரி வி ன ருக்கு ஒதுக் கீடு செய் யப் பட் டுள் ளது என்ற விப ரங் கள், மாவட்ட நிர் வா கத் தின் சார் பாக இன் ன மும் அதி கா ரப் பூர் வ மாக அறி விக் கப் ப ட வில்லை.
இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தின் மீது, இன்னும் இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதிமுகவின் சார்பாக நடை பெற்ற விருப்ப மனுக்கள் விற்பனை மையத்தில், மேற்படி பட்டியல் ஆளுங்கட்சியினர் கைகளில் இருந்தது மற்ற கட்சியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை வட்டம் ஊராட்சி தலைவர் பதவி இட ஒதுக்கீடு விபரம். 


V.களத்தூர் ஊராட்சி தலைவர் பதவி இந்த வருடம் தனி தொகுதியாக(S.C) க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வி.களத்தூர் பொது மக்கள் அதிர்ச்சி!


ஆலத்தூர் வட்டம் ! ஊராட்சி மன்ற தலைவர் பதவி.

பெரம்பலூர் வட்டம் ஊராட்சி தலைவர் பதவி.பெரம்பலூர் நகராட்சி தலைவர் பதவி  தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு (S.C)ஒடுக்கிடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் வார்டு  வாரியாக இட ஒதுக்கீடு விபரம்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-