அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
அயோத்தி,


மத நல்லிணக்கம் ஒரு சிறந்த உதாரணத்தை அமைக்கும் வகையில், அயோத்தில் உள்ள இந்து கோயில், தன்னுடைய நிலத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, சிதிலமடைந்து வரும் மசூதியை கட்டுவதற்கு அனுமதி வழங்கிஉள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது இந்தியா முழுவதும் மத கலவரத்திற்கு வழிவகைசெய்தது.


இப்போது 2016-ம் ஆண்டு ஹனுமன்கார்கி கோயில் அறக்கட்டளை, அலம்கிரி மசூசுதியை மீண்டும் கட்டுவதற்கு அனுமதி மட்டும் வழங்கவில்லை, அதற்கு ஆகும் முழு செலவையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு உள்ளது. உள்ளூர் மாநகராட்சி, 17-ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அவுரங்கசிப் ஒப்புதலில் கட்டப்பட்ட அலம்கிரி மசூதி அபாயகரமான நிலையில் உள்ளது என்று அறிவித்து உள்ளது. மசூதி கட்டிடத்திற்குள் பிரவேசிக்க மாநகராட்சி தடை விதித்து உள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது.


ஹனுமன்கார்கி கோயில் அறக்கட்டளை தலைமை பூசாரி மஹந்த் கியான் தாஸ் பேசுகையில், “எங்களுடைய செலவில் மசூதியை மீண்டும் புணரமைக்க எங்களுடைய இஸ்லாமிய சகோதரர்களிடம் கேட்டுக் கொண்டு உள்ளேன், இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சான்றிதழ் வழங்கி உள்ளோம்,” என்று கூறிஉள்ளார். கடந்த 1765-ம் ஆண்டில் மசூதி அமைந்திருக்கும் இடத்தின் உரிமையை ஹனுமன்கார்கி கோயில் அறக்கட்டளை பெற்றது.
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
307
பிரதி0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-