அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...(Dedicated to all the youths who r in abroad and also to all the elderly born kids in one's family)
நெஞ்செல்லாம் இளமையின் மோகம், ஒரு புறம்..!

பஞ்சாய் பற்றி எரியும் தனிமையின் பாரம் மறு புறம்..!!
சகோதிரிகளின் வாழ்க்கயைப் பற்றிய கவலை,

வீட்டிலோ தலைக்கி மேலாகக் கடன்..!!
சகோதரர்களின் படிப்பைப் பற்றிய கவலை,

புறப்பட்டோம் வெளிநாட்டிற்கு உடன்..!!
நிழலே இல்லாத பாலைவனம்..

இருப்பினும், அதுவே எங்களுக்கு உணவளிக்கும் பூங்காவனம்..!!
எங்களை வாட்டி எடுக்கும் இன்ஜிநியர் ஒரு பக்கம்..
அவரயும் வாட்டி எடுக்கும் Manager மறு பக்கம்..

அனைவரயும் வரட்டி போல் வாட்டி எடுக்கும் வெயில் இருக்கின்றதே..,
அந்தோ...எங்கள் துக்கம்..!!
வேலை முடிந்து , வீட்டிற்குச் செய்யும் தொலைபேசி அழைப்பில்

வருமே ஒரு வகைப் புன்னகை..!!
அதற்கு இந்த உலகத்தில் இல்லை; ஈடு இணை..!!
கணவன் தன் மனைவியோடு..,

மகன் தன் தாயோடு,

தகப்பன் தன் மகனோடு,

சகோதரன் தன் சகோதரிகளோடு..
காதலன் தன்னை மனப்பதற்கான நேரம் வந்தும்,

தனக்காக காத்திருக்கும் அவனின் காதலியோடு.,

பேரன் தன் பாட்டியோடு..!!
அந்த தொலைபேசி அழைப்பு ஒன்று போதும்..,

எங்களின் உழைப்பின் களைப்பே இல்லாது போன்று ஆகிவிடும்..
எங்களுக்கு மாத உணவின் செலவிற்காக எடுப்பதைத் தவிர்த்த்து,

மீதத்த்தை இம்மி அளவில் கூட எங்களுக்கென சேர்த்து வைக்காமல் வீட்டிற்கு அனுப்பும் என் போன்ற இன்ஜிநியர்கள் எத்தனயோ பேர்-இருக்க,

பாவம்..!! கூலி தொழில் செய்யும் தொழிலார்களின் நிலமயைப் பற்றி என்ன சொல்வது..!
விடிந்ததும் காலெந்தரை (calender) பார்க்கும் பழக்கம்..
விடுமுறை நாள் வரும் வரைக்கும் இதுவே எங்களின் அன்றாட வழக்கம்..!!
பண்டிகைத் திருநாளோ,

இல்லை;

ஈதுப் பெருநாளோ..
எங்களுக்கு தெரிந்ததெல்லாம் பெட்ஷீட்டிற்குள் உறக்கம்..
அந்தோ... உறக்கம் கூட வராமல் கண்ணீர் எங்கள் கண்களில் ஒரு ஓரமாய் வடிந்திருக்கும்..!!
தலைப் பிள்ளையாய் பிறந்தது.
எங்கள் தலை எழுத்து தானோ..!!
சிந்தும் வேர்வை எங்களுக்கு பாரம் அல்ல..!!
இறைவன் எங்களுக்காக கொடுத்த வரம்..!!
- ஆக்கம் Faiz (Engineer, SAUDI)
●/ நன்றிs ⇨ Kilakarai Classified

/▌

/ \

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-