அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய், செப்-20
கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிர்ந்து கொள்ளப்பட்ட துபை போக்குவரத்து கேமரா சம்பந்தப்பட்ட செய்தி முற்றிலும் வதந்தி என துபை போலீஸ் மறுத்து விளக்கமளித்துள்ளது.

பரப்பப்பட்ட வதந்தியின் படி, சாலை நடுவிலுள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள புதிய கேமரா, வாகனத்தை ஓட்டும் போது மொபைல் போன் உபயோகிப்போரை படமெடுக்கும் என்றும், அப்படி பிடிபடும் ஒட்டுனர்கள் 1000 திர்ஹம் அபராதம் செலுத்துவதுடன் 12 கரும்புள்ளிகளையும் பெற நேரிடும் என்றும் ஒரு கேமரா படத்துடன் செய்தி உலா வந்தது.

இந்த செய்தி ஆதராமற்றது என்றும் அத்தகைய புதிய கேமிராக்கள் ஏதும் துபையில் எங்குமே பொருத்தப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளதுடன் ஏற்கனவே உள்ள சட்டத்தின் படி மட்டுமே, வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தி பிடிபடும் ஓட்டுனர்கள் 200 திர்ஹம் மற்றும் 4 கரும்புள்ளிகளை மட்டுமே அபராதமாக பெறுவர் என விளக்கமளித்துள்ளது.

எனினும், மேற்படி 1000 திர்ஹம், 12 கரும்புள்ளிகள் மற்றும் வாகனத்தை முடக்குவதற்கான சட்ட திருத்தத்திற்கான முன்வடிவுகள் அமீரக மத்திய போக்குவரத்து கவுன்சிலின் (Federal Traffic Council) பரிசீலணைக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், பலரும் வாகனம் ஒட்டும் போது ஒரு கையால் ஸ்டியரிங்கையும் ஒரு கையால் மொபைலை நோண்டுவதாலுமே பல விபத்துக்கள் ஏற்படுகின்றன என போக்குவரத்துத் துறையின் ஆய்வுகள் கூறுகின்றன.

http://m.gulfnews.com/news/uae/transport/dubai-police-debunk-rumour-about-new-cameras-1.1898005
Source: Gulf News
தமிழில்:  
அதிரை நியூஸ்:நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-