அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 பெரம் ப லூர், செப். 23:
:வி.களத்தூர் அருகே வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற சொந்த நிலத்தில் வைத்திருந்த மின் வேலியில் தவறி விழுந்த விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே பசும்பலூர் கிராமம் மீனாட்சி தெருவைச் சேர்ந்தவர்கள் முருகன்(32) ராஜேஷ்வரி(28) தம்பதியினர். இவர்களுக்கு முகிலன்(8) முகிலேஷ்வரி(5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். வன வி லங் கு க ளி ட மி ருந்து பயிர் களை காப் பாற் று வ தற் காக முரு கன் தனது வய லில் மின் வேலி அமைத் துள் ளார். 
இந்நிலையில் நேற்று காலை உரமூட்டையை வய லுக்கு தூக் கிச் சென் ற போது எதிர் பா ராத வித மாக கால் த வறி வய லுக் குள் விழுந் து விட் டார். விழுந் த வே கத் தில் மின் கம் பி யில் முருகனின் உடல் பட்டதால், அவரை மின்சாரம் தாக்கியது.
அரு கில் இருந் த வர் கள் உட ன டி யாக முருகனை மீட்டு அப்பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண் டு சென் ற னர். ஆனால், முருகன் ஏற் க னவே உயி ரி ழந் து விட் ட தாக மருத்துவர்கள் தெரி வித் த னர். இத னை ய டுத்து சம் பவ இடத் திற்கு சென்ற வி.களத்தூர் போலீசார் முருகனின் சட லத்தை பிரேத பரி சோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எஸ்.ஐ.,சாவித்ரி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-