அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய், செப்-21
அமீரக பிரஜைகள், வெளிநாட்டினர் (Residents) மற்றும் விசிட் விசாவில் இருப்போர் என தொற்று நோயால் பாதிக்கப்படுவோர் அனைவருக்கும் முழுதாக குணமடையும் வரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சையளிக்கப்படும் என அமீரகம் அறிவித்துள்ளது.

ஆந்த்ரக்ஸ் (Anthrax), காலரா (Cholera), பறவை காய்ச்சல் (Avian Influenza), எய்ட்ஸ் (HIC/Aids) போன்ற தொற்று வியாதி நோயாளிகள், நோயாளிகளுடன் கூட வசிப்போர் மற்றும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேககிக்கப்படுவோர் என அனைவரும் இப்புதிய சட்டத்தால் பயனடைவர்.

கேடான நச்சுணவால் ஏற்படும் நோய் (Food poisoning), தொண்டை அழற்சி நோய் (Diphtheria), கடும் பக்கவாதம் (Acute flaccid paralysis), கார நச்சு (Botulism), கோலை நோய் (Enterochaemorrhagic escherichia coli (E Coli), இன்ஃபுளுயன்ஸா நோய் (Haemophius influenzae invasive disease), முச்சுத் திணறல் (Legionellosis (respiratory disease) ஆகியவையும் இந்த சிறப்பு மருத்துவ சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேற்படி நோய்களுக்கான சோதனைகள், சிகிச்சைகள், ஊசி மருந்துகள் அனைத்தும் இலவசமாகவே கிடைக்கும் என்றும் இதற்கு மருத்துவ இன்ஷூரன்ஸ் தேவையில்லை மேலும் சோதனை முடிவுகள் அனைத்தும் ரகசியம் காக்கப்பட்டு நோயாளிகளிடம் மட்டுமே வழங்கப்படும்.

எய்ட்ஸ் போன்ற பூரணமாக சிகிச்சையளிக்கப்பட முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் ஓரளவு குணமடையும் நிலையில் (until their condition stabilises) அவரவர்களின் சொந்தநாடுகளுக்கு திருப்பியனுப்பப்படுவர் என குடிநுழைவு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

மேலும் தனக்கு தொற்று நோய் உள்ளது தெரிந்திருந்திருந்தும் பிறருக்கு பரவும் வகையில் நடந்து கொள்வோருக்கு 5 வருட சிறை அல்லது 100,000 திர்ஹம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

ஆந்த்ரக்ஸ், காலரா, பறவைக் காய்ச்சல், எய்ட்ஸ், கல்லீரல் வீக்கம் (Hepatitis (A,E), காசநோய் (Tuberculosis (pulmonary and extra-pulmonary), தொழுநோய் (Leprosy), மலேரியா, தட்டம்மை (Measles), மூளைக்காயச்சல் (Meningitis), கொள்ளை நோய் (Plague), பெரியம்மை (Smallpox) போன்ற 30 வகையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் வாழ்பவர்கள் உடனடியாக 24 மணி நேரத்திற்குள் அருகாமையிலுள்ள அரசு மருத்துவ நிலையத்தில் தெரிவித்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சின்னம்மை (Chickenpox), காய்ச்சல் (Influenza), அம்மை சிரங்கு (Scabies), பொன்னுக்கு வீங்கி (Mumps), டைபாய்டு மற்றும் குடற் காய்ச்சல் போன்ற காய்ச்சல் (Paratyphoid), கல்லீரல் அழற்சி ( Hepatitis (B,C,D), மற்றும் பிற விலங்கு வழி வியாதிகளுக்கு (other Zoonotic ailments) 1 வாரத்திற்குள் மருத்துவ மையங்களுக்கு தெரிவித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொற்று வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகப்படும் எவரும் பயணங்கள் மேற்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளதுடன் உடனடியாக மருத்துவமனைகளுக்கு விஜயம் செய்து தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் புதிய சட்டம் வலியுறுத்தி கூறியுள்ளது. அதேபோல் அமீரகத்திற்குள் மேற்காணும் நோய் தொற்றுடன் நுழைபவர்களும் தாமாக முன்வந்து தெரிவிப்பதுடன் உடனடியாக மருத்துவமனைகளை சிகிச்சைகளுக்காக நாட வேண்டும்.

தொற்று வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் விசா முடியும் காலம் வரை அவர்களுக்கு இலவசமாகவே தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படும் மேலும் கட்டாய தேவையேற்படின் சிகிச்சைக்காகவே அவர்களின் விசா காலமும் நீட்டித்துத் தரப்படும் என துபாய் ஆட்சியாளர் ஷேக் முஹமது அவர்களால் கடந்த திங்கள் அன்று வெளியிடப்பட்ட இப்புதிய சட்டம் நம்பிக்கையளிக்கிறது.

Source: Gulf News
தமிழில்:அதிரை நியூஸ்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-