அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெண்களுக்கான முழு உரிமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கியவர் முஹம்மது நபி - ஜோதிமணி....!!
முஹமது நபி பெண்களுக்கான சுதந்திரத்தை, கல்வியை, சொத்துரிமையை பல நூற்றாண்டுகளுக்கே முன்பே வலியுறுத்தியவர். எளிய வாழ்வையும், சமத்துவத்தையுமே இஸ்லாம் முன்னிருத்துகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளை ஏற்க மறுக்கிறது. பிற்போக்கான மதம் என்கிற கட்டமைக்கப்பட்ட பொதுபுத்திக்கு மாறாக நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு முற்போக்கானதாக (Strikingly Progressive) இருக்கிறது .

மேற்குலக நாடுகளின் எண்ணெய் அரசியல் வேறு, இஸ்லாமை ஒரு மோசமான ஆயுதமாக பறைசாற்றி மத அடிப்படை வாதிகளை ஊட்டி வளர்க்கிறது.
இந்தச் சூழலில் உண்மையான இஸ்லாமை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் முன் உள்ளது. இன்றைய சூழலில் அந்தக் கடினமான பணியில் அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய மாபெரும் தார்மீகப் பொறுப்பு மற்றவர்களிடம் உள்ளது.
இஸ்லாம் மீது பயங்கரவாதம் திட்டமிட்டு திணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அது உலக அளவில் நடந்துவரும் சதி. இதைப் பேசாமல், இதற்கு எதிராக போராடாமல் இருக்க முடியாது. பௌத்த பேரினவாதத்தின் பெயரால் பர்மாவிலும், இலங்கையிலும் அரசியல் அப்பாவி மக்களை கொன்று குவித்தது. இந்தியாவில் இந்து மதத்தின் பெயரால் இதற்கு எப்படி சாதாரண இந்துக்களும், பௌத்தர்களுக்கும் தொடர்பு இல்லையோ அதே போல அங்கு மத அடிப்படைவாதிகள செய்கிற படுகொலைகளுக்கு சாதாரண இஸ்லாமியர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.
எந்த மத அடிப்படைவாதம் கொடூரமானது தான். ஆனால் இஸ்லாம் மீது மட்டும் பயங்கரவாத பதம் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. அதை எதிர்கொள்ளாமல், பேசாமல் கடந்து போவது சாத்தியமில்லை .


-ஜோதிமணி-

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-