அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவூதி அரேபியா, செப். 05
புனித மக்காவை சுற்றி ஏற்கனவே செயல்படும் சோதனைச சாவடிகளுக்கு மேலாக அல் ஹதா சோதனை மையத்துடன் இணைக்கப்பட்ட அல் பஹிதா சென்டர், அல் செயில் மீக்காத் எல்லை, கர்ன் அல் மனாஸில், வாதி மொஹர்ரம் ஆகிய மையங்கள் என மொத்தம் 9 சோதனைச் சாவடிகள் செயல்படும்.

இந்த சோதனை சாவடிகளின் வழியாக ஹஜ் பெர்மிட் இல்லாமல் உள்நுழைபவர்கள் பிடிக்கப்பட்டு அவர்களின் கைரேகைகள் பதியப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். மேலும் அனைத்து போக்குவரத்து நிலையங்களிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும். இதையும் மீறி உள்நுழைபவர்கள் புனித மக்கா நகரினுள் ரோந்து சுற்றும் போலீஸாரால் பிடிக்கப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் மக்கா மதினா நெடுஞ்சாலையில் 2 இடங்களில் அதாவது அர்பீன் மற்றும் அல் ஜஹ்பாவிலும், மக்கா ஜித்தா சாலையில் அல் இவா பாலம் அருகிலும் சோதனைகள் செய்யப்படும்.

மெர்ஸ் வைரஸ் விழிப்புணர்வு:
இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத கொரானா வைரஸ் என்றழைக்கப்படும் மெர்ஸ் வைரஸ் குறித்து ஹஜ் யாத்ரீகர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளதை அடுத்து இது பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் ஆங்கிலம், பிரேஞ்ச், மலாய், உருது, துருக்கிஷ் மற்றும் இந்தோனேஷிய மொழிகளில் வழங்கப்பட்டு வருகின்றன. வருங்காலங்களிலும் அதிகமதிகம் மெர்ஸ் வைரஸ் குறித்த எச்சரிக்கைகள் ஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Source: Arab News
தமிழில்: நம்ம
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-