
சவூதி அரேபியா, செப்- 25
1744 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1157) முஹமது பின் சவூது எனும் பழங்குடி இன குறுமன்னரால் தற்போதைய ரியாத் நகரை ஒட்டியுள்ள அல் திரிய்யா எனும் பகுதியில் இன்றைய பரந்துபட்ட சவுதி அரேபியாவின் ஆட்சிக்கான ஆரம்பப்புள்ளி தோற்றுவிக்கப்பட்டது.

1902 முதல் 1927 வரை நடைபெற்ற பல போர்களின் விளைவாக ஹிஜாஸ், நஜ்து எனும் இரு பெரும் நிலப்பரப்பையும் பல குறுமன்னர்கள் ஆண்ட பகுதிகளையும் ஒன்றிணைத்து தனது நிலையான ஆட்சியின் கீழ் கொண்டு வந்த சவுதி அரேபியாவின் தந்தை என அழைக்கப்படும் மன்னர் அப்துல் அஜீஸ் அல் சவூது அவர்களுடைய ஆட்சி காலத்தில், அவருடைய உத்தரவின் பேரில் சவுதி அரசாங்க பத்திரிக்கையான 'உம்மல் குரா'வில் (Um Al Qura) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு சவுதி அரேபியா எனும் புதிய பெயர் மாற்றம் நிகழ்ந்தது.
அதாவது, ஹிஜ்ரி 1351 ஆம் வருடம் ஜமாத்துல் அவ்வல் பிறை 21 அன்று முதல் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது அதாவது 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி முதல், அதன்படி நேற்று (23.09.2016 வெள்ளிக்கிழமை) சவுதி அரேபியா தனது 86 வது தேசிய தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளது.
படங்கள் குறித்த விளக்கம்:
1. அன்றைய ஜித்தா கவர்னர் ஷேக் அப்துல்லா அலி ரெதா அவர்களுடன் மன்னர் அப்துல் அஜீஸ் அல் சவூது அவர்கள்.
2. இரு பெரும் மாகாணங்களாக திகழ்ந்த ஹிஜாஸ் மற்றும் நஜ்தை குறிக்கும் வரைபடம்.
Source: Arab News
தமிழில்: அதிரை நியூஸ்:நம்ம ஊரான்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.