அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவூதி அரேபியா, செப். 05
சவுதியில் பல்வேறு பல்கலைகழக பேராசிரியைகள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் என மார்க்கக் கடமைகளை சொல்லித்தரும் 800 பெண் வழிகாட்டிகள் ஹஜ், உம்ரா அமைச்சகத்தால் நியயமிக்கப்பட்டுள்ளனர்.

ஹஜ் தொடர்பான அமல்களுக்கு மட்டும் விளக்கமளிக்கக்கூடிய இந்த அறிஞர்களின் சேவையை வேண்டுவோர் 'அல் தவிய்யா' அலுவலகத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு மேற்படி 800 பெண் அறிஞர்களிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படுபவர்கள் ஹஜ் செய்வது குறித்தும், ஹஜ் தொடர்பான சந்தேகங்களுக்கு மட்டும் விளக்கம் தருவதுடன் தேவையாக வழிகாட்டலையும் மேற்கொள்வர்.

ஹஜ் யாத்ரீகளுக்கான சேவையில் 550 ஸ்கவுட் தொண்டர்கள்;

ஹஜ் யாத்ரீகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. அந்த வகையில் ஹஜ், உம்ரா அமைச்சகத்தின் முன் அனுமதியுடன் 550 ஸ்கவுட் தொண்டர்கள் 'மினா'வில் களமிறங்கியுள்ளனர். இவர்கள் எதிர்வரும் துல்ஹஜ் பிறை 7 ஆம் நாள் வரை புனித பிரதேசங்களில் தங்கியிருந்து ஹஜ் யாத்ரீகளுக்கு தேவையான சேவையை வழங்கவுள்ளனர்.

இந்த ஸ்கவுட் விளையாட்டு வீரர்களும் இளைஞர்களும் ஜிபிஎஸ் கருவிகள், மின்னனு வரைபடங்களுடன் வழிகாட்டுவர் மேலும் சுகாதார நலன், கம்ப்யூட்டர் வழி தொழிற்நுட்ப உதவிகள், கலாச்சாரம், ஊடகம் மற்றும் பொது உறவுகள் துறைகளுக்கும் யாத்ரீகளுக்குமிடையில் பாலமாகவும் செயல்படுவர்.

Source: Arab News
தமிழில்: 
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-