அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ரிலையன்ஸ் ஜியோ சேவையானது செப்டம்பர் 5ம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுகிறது. ஜியோவின் வணிக ரீதியிலான சேவை டிசம்பர் 31ம் தேதி தொடங்க உள்ளது.

1) 1 GB Data ரூ.25 - ரூ.50 வரை ஜியோ வழங்குகிறது. இது தற்போது உள்ளதை விட 5 முதல் 10 மடங்கு வரை குறைவான விலையாகும்.

2) 4G ஸ்மார்ட் போன்களை ரூ.2,999 முதல் ரிலையன்ஸ் விற்பனைக்கு கொண்டு வருகிறது. Wi-Fi போன்று Jio-Fi-ஐ ரூ.1,999-க்கு விற்பனைக்கு கொண்டு வருகிறது.

3) எப்போதாவது Data பயன்படுத்துபவர்களுக்காக ரூ.19-இல் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஜியோ, குறைந்த அளவு Data பயன்படுத்துபவர்களுக்காக ரூ.149-இல் மாதாந்திர திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது.

4) இந்தியா முழுவதும் ஜியோ Voice Call-களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.

5) e-KYC முறையில் 15 நிமிடங்களில் வாடிக்கையாளர்கள் ஜியோ இணைப்பை பெற முடியும். வீடு அல்லது கடையில் இருந்து ஜியோ-வை Activation செய்துகொள்ள முடியும்.

6) மாணவர்களுக்கு சிறப்பு சலுகையாக 25 விழுக்காடு அதிக Data-வை ஜியோ வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7) செப்டம்பர் 5 முதல் டிசம்பர் 31 வரையிலான அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

8) நாடு முழுவதும் 18,000 நகரங்கள் மற்றும் 2 லட்சம் கிராமங்களை ஜியோ 4G இணைப்புக்குள் கொண்டுவர ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. 2017 மார்ச் மாதத்திற்குள் நாட்டின் 90 விழுக்காடு மக்கள் தொகைக்கு சேவையை கொண்டு சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-