அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவூதி அரேபியா, செப்-19
இங்கேயுமா? ஆமாம் இங்கே சவூதியிலும் தான்!

சரிந்து விழுந்த பெட்ரோலிய விலையால் ஏற்கனவே உம்ரா விசா உட்பட அனைத்து வகை விசா கட்டணங்களையும் உயர்த்திவிட்ட நிலையில் தற்போது 7 வகை சேவைத்துறையிலும் கை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 50 சதவிகித மானியத்தில் சேவைகளை வழங்கிவந்த துறைமுகங்கள் (Ports), பாஸ்போர்ட் (Passports), ஓட்டுனர் உரிமம் (Car Driving License), வாகன மாற்று கட்டணங்கள் (Car Transfer), போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் (Traffic Violations), வீட்டுப் பணியாளர்களின் விசா புதுப்பித்தல் (Domestic Workers Resident Visa Renewal), 193 வகையான வர்த்தக பொருட்களின் (Commodity Items) மீதான கஸ்டம்ஸ் கட்டணங்கள் ஆகியவற்றிற்கு இனி முழுக்கட்டணம் செலுத்த வேண்டும் அதாவது இப்போது வசூலிக்கப்படும் சேவைக் கட்டணங்களை எதிர்வரும் 2016 அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இரட்டிப்பாக செலுத்த வேண்டும்.

சென்ற மாதம் விலை உயர்த்தப்பட்ட விசா கட்டணங்கள் ஒரு பார்வை:
1. உம்ரா விசா – 2000 ரியால்கள் (முதன்முறை வருபவர்களுக்கு இலவசம்)
2. 6 மாத மல்டிபிள் என்ட்ரி விசா – 3000 ரியால்கள்
3. 12 மாத மல்டிபிள் என்ட்ரி விசா – 5000 ரியால்கள்
4. 24 மாத மல்டிபிள் என்ட்ரி விசா – 8000 ரியால்கள்
5. டிரான்ஸிட் விசா – 300 ரியால்கள்
6. 6 மாத எக்ஸிட் - ரீ என்ட்ரி விசா – 600 ரியால்கள்

அப்ப இவ்வளவு விலையேற்றத்தையும் சமாளிக்க சம்பளம் ஏறுச்சா??? இதைத்தான் தழிலில் 'பட்ட காலிலேயே படும்' என்று சொல்கிறார்களோ.

Source: Arab News
தமிழில்: அதிரை நியூஸ்:நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-