அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர். செப்டம்பர் 14. 
 மேற்கு தெருமக்கள் அனைவரும் வசூல் செய்து வருடந்தோரும் மேற்குத் தெருவில் தீன் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை அசார் தொழுகை முடிந்த உடன் 65 வது கொடியேற்று விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலமையேற்று கொடியை நமதூர் ஜமாத் தலைவர் T.S.E. லியாக்கத் அலி அவர்கள் ஏற்றி வைத்தார்கள். முன்னதாக கிராஅதை மோதினார் முஹம்மது அலி அவர்கள் ஓதினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு முஹம்மது காசிம், A.சவுக்கத் அலி, நாட்டமை ஷாஹப்தீன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. வரவேற்புரை அப்துல் லத்தீப் அவர்கள் ஆற்றினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்புரையாக களத்தூர் கவிஞர் உளுந்தூர்பேட்டை முகைதீன் அவர்கள் ஆற்றினார். நிகழ்ச்சி முழுவதும் ஷாஜகான் அவர்கள் தொகுத்து வழங்கினார். பின் இறுதியாக நன்றியுரையும் அவர் ஆற்றினார். 
இதில் வி.களத்தூர் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனார்.கலந்து கொண்ட அனைவருக்கும் பூந்தி வழங்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-