அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவூதி அரேபியா, செப்.16


அல்லாஹ்வுடைய அருளால் இந்த வருட ஹஜ் கடமைகள் எத்தகைய அசம்பாவிதங்களுமின்றி இனிதே நிறைவேறியது, புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.

இந்த வருடம் ஹஜ் யாத்திரையின் பெயரால் ஏமாற்றப்பட்ட சுமார் 48,400 நபர்களுக்கு சுமார் 500 மில்லியன் ரியால்களை மனிதாபிமான அடிப்படையில் தாமாக முன்வந்து நஷ்டஈடாக வழங்கியுள்ளதாகவும், சுமார் 45 போலி ஹஜ் ஏற்பாட்டு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சவுதி அரசின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் தெரிவித்தள்ளது.

மேலும் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் தரைவழி உள்நுழைவு வழிகள் என 21 நிலையங்களின் வாயிலாக முறையான ஹஜ் பெர்மிட் இல்லாமல் வந்த சுமார் 256,000 பேர்களும் சுமார் 100,000 வாகனங்களும் தடுக்கப்பட்டு காவலின் கீழ் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளததுடன் இந்த வருட ஹஜ் ஏற்பாடுகள் வெற்றிகரமாக நடந்தேறிட உதவிய அனைத்து துறைகளுக்கும் நன்றியும் தெரிவித்துள்ளது.

Source: Arab News
தமிழில்: 
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-