அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் அருகே மருந்துக்கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர் மாவட்டம்  வாலிகண்டபுரம் அருகே உள்ள கீழப்புலியூரை சேர்ந்தவர் கதிரவன் (வயது 30). இவரது மனைவி கவிதா (28). கதிரவன் அவரது வீட்டின் முன்பு மருந்துக்கடை வைத்து நடத்தி வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தூங்கினார். இன்று அதிகாலை கடையை திறப்பதற்காக கதிரவன் எழுந்து சென்றார். அப்போது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.12 லட்சம் பணம் மற்றும் 50 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. அந்த பணத்தின் மூலம் கதிரவன் பெரம்பலூரில் நிலம் ஒன்றை வாங்க இருந்தார்.

இதற்காக அந்த பணத்தை பீரோவில் வைத்திருந்தார். இன்று பத்திர பதிவு முடிந்த பின் நிலத்தின் உரிமையாளருக்கு பணத்தை கொடுக்க இருந்தார். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும்.

இது குறித்து கதிரவன் மங்களமேடு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. ஜவகர்லால், இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மருந்தகத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்றதும், மர்ம நபர்கள் கடையின் கதவை உடைத்து, உள்ளே சென்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் கதிரவனின் மருந்தகத்தில் பணம், நகை இருப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த கைவரிசையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி, அவர் களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் பெரம் பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-