அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,

பெரம்பலூரில் பூட்டிய வீட்டில் ஜன்னலை பெயர்த்தெடுத்து 5 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை–பணம் திருட்டு

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை முஸ்தபா நகரை சேர்ந்தவர் முகமது சித்திக் (வயது44). இவருடைய மனைவி ஜாஸ்மீன் (31). இவர்களுக்கு ஷாகீனா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த சில வருடங்களாக முகமது சித்திக் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். குழந்தை ஷாகீனாவுடன் வசித்து வரும் ஜாஸ்மீன் கடந்த 1–ந் தேதி மதியம் வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர், வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் ஜன்னல் கிரில் கம்பி பெயர்த்து எடுக்கப்பட்டு தனியாக கீழே கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜாஸ்மீன் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது ஒரு அறையில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து ஜாஸ்மீன் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை செகரித்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை–பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

பெரம்பலூரில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமும், பீதியும் அடைந்துள்ளனர். எனவே திருட்டு சம்பவங்களை தடுக்க பெரம்பலூர் போலீசில் போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-