அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 29 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்

விரைவு வாக்காளர் பட்டியல்

பெரம்பலூரில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை வருவாய் கோட்டாட்சியர் பேபி நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:–

பெரம்பலூர் மாவட்டத்தில் 29.4.2016 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெரம்பலூர் (தனி), குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5,34,115 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அதன்பின்னர் நடைபெற்ற தொடர் திருத்த பணியில் மொத்தம் 757 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டனர். இறப்பு, இரட்டை பதிவு, இடப்பெயர்ச்சி போன்றவை காரணமாக, பெரம்பலூர்(தனி), குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5,863 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் தொகுதி (தனி)

தற்போது வெளியிடப்படுகின்ற வாக்காளர் பட்டியலின்படி பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் இருந்த 2 துணை வாக்குச்சாவடிகள் (பாப்பாங்கரை, கவுல்பாளையம் வாக்குச்சாவடிகள்) இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி முதன்மை வாக்குச்சாவடிகளாக மாற்றம் செய்யப்பட்டு தற்போது 322 வாக்குசாவடிகள் உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் விவரம்:–

ஆண் வாக்காளர்கள்– 1,34,475

பெண் வாக்காளர்கள்–1,41,000

திருநங்கைகள்– 14

மொத்தம்– 2,75,489

குன்னம் தொகுதி

குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 316 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் விவரம்:–

ஆண் வாக்காளர்கள்– 1,26,012

பெண் வாக்காளர்கள்– 1,27,497

திருநங்கைகள்– 11

மொத்தம்:– 2,53,520

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்கள் 2,60,487 பேரும், பெண்கள் 2,68,497 பேரும், திருநங்கைகள் 25 பேரும் என மொத்தம் 5,29,009 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

விண்ணப்பிக்கலாம்

2017–ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணியை முன்னிட்டு  வருகிற 11–ந் தேதி, 25–ந் தேதி ஆகிய 2 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. 1.1.2017 அன்று 18 வயது பூர்த்தி அடைய இருக்கும் நபர்கள் தங்களது பெயரை பதிவு செய்ய தக்க ஆவணங்களுடன் நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வருகிற 30–ந் தேதி வரை அனைத்து வேலைநாட்களிலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், தாசில்தார்கள் பாலகிருஷணன் (பெரம்பலூர்), அமுதா (செந்துறை), செல்வராஜ்(தேர்தல்) மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-