அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மக்கா (15 செப் 2016): இவ்வருடம் அனுமதியின்றி ஹஜ் செய்ய முயற்சித்த 4,26,683 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து மக்கா கவர்னர் இளவரசர் காலித் அல் ஃபைசல் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"இவ்வருடம் ஹஜ் கிரியைகள் மிகவும் அமைதியாக நடக்க உதவிய அனைத்து அரசு அதிகரிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த வருடம் அசம்பாவிதம் நடைபெற்ற பகுதியில் இவ்வருடன் எந்தவித அசம்பாவிதமும் இன்றி ஹஜ் யாத்ரீகர்கள் சுமூகமாக ஹஜ் கிரியைகளை செய்தனர். அதேவேளை ஹஜ் செய்ய அனுமதியின்றி மக்காவிற்குள் நுழைய முயற்சித்த 4,26,683 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நாடு கடத்தப் படுவார்கள் மேலும் அவர்களுக்கு உதவிய வாகனங்கள் 171246 வாகனங்கள் கைபற்றப் பட்டுள்ளன. அவற்றிற்கான அனுமதிகள் ரத்து செய்யப்படுவதோடு, மேலும் அபராதம் மற்றும், கைது நாடுகடத்தல் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும்.

மேலும் ஹஜ் யாத்ரீகர்களில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் மக்கா மற்றும் மதீனா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-