அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய், செப். 09
ஹஜ் பெருநாள் பண்டிகையையொட்டி சிறைகளில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு நாட்டினரில் 488 பேரை விடுதலை செய்யுமாறு துபாய் நாட்டின் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரக துணை ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் அஹமத் பின் ரஷித் அல் மக்தூம் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த பொது மன்னிப்பின் மூலம் விடுதலையாகும் கைதிகள் அனைவரும் நேர்மையான பாதையை இனி கடைபிடித்து, தங்களது குடும்பத்தாருடன் இணைந்து வாழ துபாய் ஆட்சியாளர் ஷேக் அஹமத் பின் ரஷித் அல் மக்தூம் விரும்புவதாகவும், குறிப்பாக ஹஜ் பெருநாள் பண்டிகையை அவர்களும் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என ஆசைப்படுவதாகவும் துபாய் அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த 488 கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக ஆட்சியாளரான ஷேக் கலீபா பின் சைது அல் நயான் பல்வேறு நாடுகளை சேர்ந்த 442 கைதிகளை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் விடுதலை ஆவதற்கு செலுத்த வேண்டிய அபராத தொகை அனைத்தையும் அரசே ஏற்றுக்கொண்டு வழங்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதே வழியை பின்பற்றி அஜ்மான் ஆட்சியாளரான ஷேக் ஹுமைது பின் ரஷீது அல் நைமி பல்வேறு நாடுகளை சேர்ந்த 110 கைதிகளை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்ட பகுதி சிறைகளில் இருந்து விடுவிக்கப்படும் வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகள் உடனடியாக தங்களது தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Source: Gulf News
தமிழில் :
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-