அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், லாரிகள் கன்னட அமைப்பினரால் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்நிலையில், கேபிஎன் நிறுவன பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 பேருந்துகள் கொளுத்தப்பட்டதாக அதன் உரிமையாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்திருந்த நிலையில், பற்றி எரியும் வன்முறையை கட்டுப்படுத்தும் திறனற்றதாக கர்நாடக போலீசார் திகழ்வது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கட்டுக்கடங்காமல் வன்முறை பற்றி எரிவதால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

கொளுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் கர்நாடக பதிவு எண் கொண்டவையாக இருந்த போதிலும், அவைகளின் உரிமையாளர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-