அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வெவ்வேறு சம்பவங்களில் பிளஸ் 1 பள்ளி  மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பிளஸ்–1 மாணவி


பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள பெருமாள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மகள் ரேகா(வயது17). இவர் பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கனகா என்ற பெண்ணுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கனகாவின் கணவர் கோவிந்தராஜ், ரேகாவை திட்டினாராம். இதில் மனமுடைந்த ரேகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை


பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கராஜ். இவருடைய மனைவி மருதாம்பாள்(வயது50). இவர் கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை தனக்கு சொந்தமான காட்டில் உள்ள வேப்பமரத்தில் மருதாம்பாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் மனைவி வீடு திரும்பாததால் காட்டுற்கு சென்ற ரெங்கராஜ், அங்கு மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருதாம்பாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குன்னம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள நத்தகாடு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பச்சையம்மாள்(வயது 20). இருவருக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் கணவருக்கு கடந்த 2 நாட்களாக பச்சையம்மாள் தொடர்ந்து போன் செய்தார். ஆனால் கஜேந்திரன் போனை எடுத்து பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பச்சையம்மாள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் தனியார் மத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை பச்சையம்மாள் உயிரிழந்தார்.

இதுகுறித்து பச்சையம்மாளின் தந்தை பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சையம்மாளுக்கு திருமணமாகி 1½ ஆண்டே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் பேபி மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-