அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.

சுவாதி படுகொலை செய்யப்பட்டவுடன் எப்படி பிலால் மாலிக் என்று இஸ்லாமியனை தொடர்புப்படுத்தி அவதூறு பரப்பினார்களோ அதேப்போன்று சசிக்குமார் படுகொலையிலும் இஸ்லாமியர்களை தொடர்புப்படுத்தி இந்து முன்னணி - இந்துத்துவ காவி பயங்கரவாதிகள் கோவையிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

மேலும் இந்து முன்னணி பயங்கரவாதிகள் பேரூந்துகள் மற்றும் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

கோவையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தினம் என்பதால் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் காவல்துறை கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கோவை இந்து முன்னணி பிரமுகர் படுகொலை; பதற்றம், போலீஸ் குவிப்பு

கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கோவை இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தனது பணிகளை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை சுப்பிரமணியம்பாளையம், சக்கரை விநாயகர் கோயில் அருகே அவர் வந்தபோது, அப்பகுதியில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு பேராடிய சசிகுமாரை மீட்ட அப்பகுதியினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் பலியானார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.பஸ்கள் இயக்கப்படவில்லை:கோவை - மேட்டுப்பாளையம் புறநகர் மற்றும் நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கவுண்டம்பாளையம், சுப்ரமணியம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அசுடைக்கப்பட்டன. கோவை - மேட்டுப்பளையம் சென்ற தனியார் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.திருப்பூரில் பஸ் கண்ணாடி உடைப்பு:திருப்பூரிலும் கல்வீசி பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, கொங்கு மெயின்ரோடு, அவினாசி ரோடுகளில் தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.


தாக்குதல்... மோதல்... கலவரம்...! கோயமுத்தூர் நிலவரம்கோவை : கோவையில் இந்து முன்னணி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் அமலான பந்த் போராட்டம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கடை உடைப்பு, மோதல் என கோயமுத்தூரின் திக் திக் நிமிடங்கள் கோவை வாசிகளை பதைபதைக்க வைத்துள்ளது.

கோவையில் இந்து முன்னனி நிர்வாகி சசிக்குமார் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, இன்று கோவை, திருப்பூரில் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. நள்ளிரவு பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், வழக்கம்போல் இன்று காலையில் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கடைகளை மூட இந்து முன்னணியினர் வற்புறுத்தியதையடுத்து கடைகள் அடைக்கப்பட்டன.  தொடர்ந்து கோவை திருப்பூரில் இயங்கிய அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதையடுத்து பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. ஆட்டோ, கார்களின் இயக்கமும் பல இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தது.இந்து முன்னணி நிர்வாகி கொலை..! கோவை திருப்பூரில் அறிவிக்கப்படாத 'பந்த்'
இந்த சம்பவத்தால் கோவையில் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். சசிக்குமார் உடல் வைக்கப்பட்ட அரசு மருத்துவமனை முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.  இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து டவுன் ஹால் நோக்கி ஊர்வலமாக சென்றவர்கள், சாலையின் இருபுறமும் இருந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் என கண்ணில் பட்டவை எல்லாவற்றையும் தாக்கினர். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இரு தரப்பினரும்  நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழலும் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல் வீசி தாக்குதல் நடத்திக்கொண்டனர். இதில் போலீஸ் ஏட்டு உட்பட சிலர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சசிக்குமார் சடலம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மாநகர சாலைகளில் 10 கி.மீ தூரம் சசிக்குமாரின் உடல் ஊர்வலமாக அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. உடல் செல்லும் வழியெங்கும் பூட்டியிருந்த கடைகள் அனைத்தும் அடித்து உடைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் பங்கேற்றனர்.

கோவையில் அடுத்தடுத்த நிகழ்வுகளால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கோவையில் தேவையற்ற பதற்றத்தை தடுத்து அமைதியை நிலை நாட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை துடியலூரில் பார்ப்பனீய பயங்கரவாதிகள் போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்தனர்..

கோவை துடியலூரில் 10 க்கும் மேற்பட்ட கடைகளை அடித்து நொறுக்கி செய்தியாளர் மீதும் தாக்குதல்..

மேட்டுப்பாளையத்தில் சரக்கு லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ஓட்டுநர் படுகாயம்..

கோவையில் பார்ப்பனீய  பயங்கரவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்ட  கடைகள்...

கோவையில் பார்ப்பனீய பயங்கராவதிகளால் பெட்ரோல் குண்டு தாக்குதலுக்கு உள்ளன பள்ளிவாசல்..

கோவையில் பார்ப்பனீய பயங்கரவாதிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி மீது மிருகவெறி தாக்குதல்..

கோவையில் பள்ளிக்குழந்தைகள் உள்ளே இருக்கும் நிலையிலும்  ஆட்டோ  மீது பார்ப்பனீய பயங்கரவாதிகள் தாக்குதல்..

"எங்களை நிம்மதியாக வியாபாரம் செய்ய விடாமல் கடையை மூட சொல்லி இந்துத்வா அமைப்பினர் மிரட்டுகிறார்கள்"கோவை மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்..

இறுதியாக...

வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடும் பார்ப்பனீய பயங்கரவாதிகளில் ஒருவனை கூட கைது செய்யாத காவல்துறை.,.??


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-