அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஹரியானா மாநிலம் குர்கான் மேவாட் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி நள்ளிரவில் ஒரு விவசாயியின் வீட்டிற்குள் புகுந்த கும்பல் விவசாயி மற்றும் அவரது மனைவியை அடித்துக் கொன்றது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்த 14 வயது சிறுமி உட்பட 3 பேரைக் கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்தனர்.
வீட்டில் இருந்த இளம்பெண்களைக் குறிவைத்தே இந்த சம்பவம் நடந்ததாகக் கருதப்பட்டு வந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் முதல் முறையாக தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அந்த கும்பலில் இருந்தவர்கள் தங்களிடம் “நீ மாட்டிறைச்சி திண்றாயா?” என்று கேட்டதாகவும், இல்லை என்று மறுத்த போதும் “இதுதான் உங்களுக்கு தண்டனை” என்று கூறி தங்களை வல்லுறவுக்கு ஆட்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் என்று கூறி 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர்கள் மீது அத்து மீறி நுழைந்தது பாலியல் வன்கொடுமை ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்கு பதிந்தனர். உள்ளூர் மக்கள் போராடியதன் பின்னரே அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் நாளை மறுதினம் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டப்பட உள்ளது. இந்நிலையில், போலீசார் பறிமுதல் செய்த 7 மாதி பிரியாணி பொட்டலங்களில் மாட்டிறைச்சி இருப்பதாக ஹரியானா மாநில பல்கலைக்கழக ஆய்வகம் தெரிவித்துள்ளது அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் மாட்டிறைச்சியைக் காரணம் காட்டி பல்வேறு கொடூரங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-