அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, செப்.05
சவூதியின் சிவில் விமான போக்குவரத்து நுகர்வோர் பாதுகாப்பிற்கான அதிகார மையம் தெளிவுபடுத்தியுள்ளபடி, விமானம் புறப்பட தாமதமானால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து பயணிகளுக்கு முறையாக விமான நிறுவனங்கள் அறிவிக்கத்தவறும் பட்சத்தில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 300 ரியால்கள் என பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், இது அதிகபட்சம் 10 மணிநேரத்திற்கு மட்டும் அதாவது 3000 ரியால்களுக்கு மேல் செல்லாத வகையில் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீடாகும்.

மேலும், விமானம் புறப்பட 6 மணிநேரத்திற்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து தருவதும் விமான நிறுவனங்களின் பொறுப்பாகும்.

பயணிகள் டிக்கெட்டுகளை வாங்கும் போது சவூதியின் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களுக்கு ஏற்ப வாங்க வேண்டும் இல்லையேல் விமான நிறுவனங்கள் விமான தாமதம் குறித்து அவர்களுக்கென வைத்திருக்கும் சட்டங்களுக்கு உட்பட வேண்டிவரும், மேலும் குறைவான இழப்பீட்டை பெறுவது அல்லது முழுமையாக விட்டுக்கொடுப்பது என்பது பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் பெற்றுக் கொள்வதும் அவரவர் தனிப்பட்ட உரிமையாகும் எனவும் மேல் விளக்கமளித்துள்ளது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-