அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,செப்.22:
பெரம்பலூரில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது என கலெக்டர் நந்த குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது :காஸ் சிலிண்டர் மறு நிரப்பு வழங்குவதில் காணப்படும் குறை பாடுகள், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் காஸ் முகவர்களின் மெத்தன போக்கு தொடர்பாக வரப்பெறும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காஸ் விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக காஸ் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம்தேதி மாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் காஸ் முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நுகர்வோர்கள் காஸ் சம்பந்தமாக குறைகள் இருப்பின் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என்றும், காஸ் விநியோகம் தொடர்பாகக் காணப்படும் குறைபாடுகள்களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-