அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஷார்ஜா, செப்-26
உலகெங்கும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் சைபர் கிரைம் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே என்றாலும் எளிதில் ஏமாறும் ஏமாளிகளும் அவர்களே, மெத்தப்படித்தவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

அப்படி ஒரு கூடாநட்பு இன்றைய சமூக ஊடகங்கள் வழியாக ஓரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் ஏற்பட உடனே அந்த ஆணுக்கு தனது புகைப்படங்களை சகட்டுமேனிக்கு நம்பி அனுப்பியுள்ளார் இந்தப் பெண்.

விளைவு, புகைப்படங்களை சேமித்து வைத்துக் கொண்ட அந்த காமுகன் சமூக ஊடகங்களில் பரப்பி விடுவேன் என மிரட்ட அந்தப்பெண் விபரமாக சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்க, பிடிபட்டான் அந்த எச்சை.

ஷார்ஜா ஷரியா கோர்ட்டில் தனது குற்றத்தை அவன் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து 2.5 லட்சம் திர்ஹத்தை கட்டு என ஓங்கி மண்டையில் அடித்துள்ளது. பேத்தனமா! போட்டோக்களை அனுப்பிய அவளுக்கும் ஒரு தண்டனை கிடைச்சிருந்த மற்ற ஏமாளிகளுக்கும் ஒரு எச்சரிக்கை பாடமாக அமைந்திருக்கும்.

ஊகும், இந்த நீதிபதியை இந்தியாவிற்கு அனுப்பி குற்றவாளிகளுக்கு தையல் மெஷின் கொடுப்பது எவ்வாறு என பாடம் படிக்கச் சொல்லனும்.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-