அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கேரளாவை சேர்ந்தவர் ஜார்ஜ் வி நீரேபரம்பில். இவர் துபாயில் மெக்கானிக் ஆக பணிபுரிகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் ‘புர்ஜ் கலீபா’ என்ற உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டப்பட்டது.

பல அடுக்கு மாடிகளை கொண்ட இக்கட்டிடத்தில் 900 வீடுகள் உள்ளன. அவற்றில் 22 வீடுகளை இவர் விலைக்கு வாங்கி அவற்றின் உரிமையாளர் ஆக மாறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் போது, “புர்ஜ் கலிபா கட்டிடம் பகுதிக்கு நான் எனது உறவினர் ஒருவருடன் சென்றேன். அப்போது அவர் என்னை பார்த்து, ‘இதோ பார் இக்கட்டிடத்துக்குள் உன்னால் நுழைய முடியாது’ என கிண்டல் செய்தார்.

அன்று முதல் எனக்குள் ஒரு வைராக்கியம் ஏற்பட்டது. எப்படியாவது இங்கு வீடு வாங்கி குடியேற வேண்டும் என விரும்பினேன். அதை தொடர்ந்து கடுமையாக உழைத்து பல வியாபாரங்கள் செய்தேன்.
2010-ம் ஆண்டு ‘புர்ஜ் கலிபா’ கட்டிடம் திறக்கப்பட்டது. அப்போதே அங்கு ஒரு வீடு வாங்கி குடிபுகுந்தேன். அதை தொடர்ந்து அங்கு 22 வீடுகள் விலைக்கு வாங்கியிருக்கிறேன்.

இத்துடன் எனது கனவும், சவாலும் முடியவில்லை. தொடர்ந்து இன்னும் இங்கு பல வீடுகளை விலைக்கு வாங்குவேன். தற்போது இங்குள்ள தனியார் வீட்டு உரிமையாளர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமையாக உள்ளது” என்றார். . 828 மீட்டர் உயரமான புர்ஜ் கலீபாவில் 900 அபார்ட்மென்ட்கள் உள்ளன. இத்தனைக்கும் நெரியாபரம்பில் பரம்பரை பணக்காரர் கிடையாது. கிராமத்தில் விவசாயம் செய்து வந்த அவர், 1976ல் சாதாரண மெக்கானிக்காக சார்ஜா சென்றுள்ளார். அங்கு ஏசி மெஷின்களுக்கு கிராக்கி இருந்த்தால் அதையே தொழிலாக செய்து இன்று தொழிலதிபராக வளர்ச்சி அடைந்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-