அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


புகுவோகா: பிரபல இந்திய திரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜப்பானின் 2016ம் ஆண்டுக்கான புகுவோகா விருது வழங்கப்பட்டது. ஜப்பான் நாட்டின் புகுவோகா நகரில் யோகோபோடியா அமைப்பு 1990ம் ஆண்டு முதல் ஆசிய கலாசாரத்தை உருவாக்குபவர்கள் அல்லது பாதுகாப்பவர்களுக்கு கிராண்ட், அகாடமிக், கலை மற்றும் கலாசாரம் என்ற 3 பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. இசைத்துறையில் செய்த சேவையை பாராட்டி, 2016ம் ஆண்டிற்கான புகுவோகா விருது கிராண்ட் பிரிவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

அகாடமிக் பிரிப்பில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அமீத் அக்கம்போவுக்கு வழங்கப்பட்டது. கலை மற்றும் கலாசார பிரிவில் பாகிஸ்தானை சேர்ந்த கட்டிட கலை நிபுணர் யாஸ்மின் லாரிக்கு வழங்கப்பட்டது. சிதார் இசைக்கலைஞர் ரவி சங்கர், பரத நடன கலைஞர் பத்மா சுப்ரமணியம், வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாபார், இசைக் கலைஞர் அஜ்மத் அலி கான், சமூக மற்றும் கலாசாரத்துறையில் ஆசிஸ் நந்தி, அரசியல் அறிவியல், வரலாற்று துறை அறிஞர் பார்த்தா சாட்டர்ஜி, சுற்றுச்சூழல் ஆய்வாளர் வந்தன ஷிவா, ஓவியக்கலைஞர் நளினி மாலினி, வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திரா குகா ஆகியோர் ஏற்கெனவே இந்த விருதை பெற்றுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-