அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
:
சவூதி அரேபியா, செப்.04
காய்ச்சல், சோர்வு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மயங்கிய சுமார் 170 வயதான ஹஜ் யாத்ரீகர்கள் உடனுக்குடன் முதலுதவி அளிக்கப்பட்டனர். மேலும் சிவில் டிபன்ஸ் மற்றும் சவுதி செம்பிறைச் சங்க உதவியுடன் அருகிலுள்ள சுகாதார மையங்களில் சேர்க்கப்பட்டனர். வெயிலாலும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் போது நெரிசல் காணப்பட்டதாலும் இவ்வாறு அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

புனித கஃபா வளாகத்திலும் நுழைவு வாயில்களிலும் தவாப் சுற்றும் பகுதியிலும் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனுக்குடன் உதவ தேவையான அவசர கால உதவிக்குழுக்களும் மருந்துவ உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் புதிதாக மோட்டர் பைக் மருத்துவ உதவிக்குழுக்களும் ஹரம் ஷரீஃபை சுற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: Arab News
தமிழில்: 
அதிரை நியூஸ்


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-